கணக்கியல் துறையில் டிகிரி பட்டம் பெற்றார் நந்தினி சந்திரசேகரன்!

பாங்கி, நவ 17-
பாங்கி யுனைடென்ட் தெனாகா நேஷனல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் நந்தினி சந்திரசேகரன் கணக்கியல் துறையில் டிகிரி பட்டம் பெற்றார்.

இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் குமாரி நந்தினி உட்பட ஏராளமான மாணவர்கள் பட்டம் பெற்று மகிழ்ந்தனர்.

ஸ்ரீ செர்டாங் பூமாலை தமிழ்ப் பள்ளியில் தனது தொடக்க கல்வியை பயின்ற நந்தினி பின்னர் செர்டாங் தேசிய இடைநிலை பள்ளியில் எஸ்பிஎம் கல்வியை முடித்தார்.

எஸ்பிஎம் தேர்வில் இவர் 9ஏ 1பி பெற்ற பின்னர் தெனாகா நேஷனல் பல்கலைக்கழகத்தில் கணக்கியல் துறையில் தனது கல்வியை தொடர்ந்தார்.

ஐந்தாண்டு கால கல்வி முடித்த இவர் இன்று டிகிரி பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் அறங்காவலர் சந்திரசேகரன் (டிஎன்பி) – திருமதி பரமேஸ்வரியின் இளைய மகளான இவர் தொடர்ந்து மேற்கல்வியைத் தொடர உறுதி பூண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles