அரசின் முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பீர்- மலேசியர்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் வேண்டுகோள்!

ரியோ டி ஜெனிரோ, நவ. 19 – நன்மை தரக்கூடிய முன்னெடுப்புகளை அமல்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு வெளிநாட்டில் உள்ள மலேசியர்கள் உட்பட நாட்டின் அனைத்து பிரஜைகளும் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தில் ஒரு வலுவான குழு உள்ளது என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

அது ஒட்டுமொத்த மக்களுக்கும் பயனளிக்கும் கொள்கைகளையும் உத்திகளையும் செயல்படுத்த கடுமையாக பாடுபட்டு வருகிறது.

மடாணி அரசாங்கம் ஊழல் அல்லது தேசத்தின் செல்வத்தை கொள்ளையடிக்கும் எந்த தரப்பினருடனும் ஒருபோதும் சமரசம் செய்யாது என்றும் அவர் திட்டவட்டமாகக கூறினார்.

நேற்று இங்கு மலேசிய புலம்பெயர்ந்தோர் மற்றும் நாட்டின் நண்பர்கள் உள்பட சுமார் 200 பேர் கலந்து கொண்ட இரவு விருந்தில் உரையாற்றிய போது டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கொண்டு வரும் மடாணி அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை டத்தோஸ்ரீ அன்வார் எடுத்துரைத்தார்.

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மட்டுமின்றி நாட்டுக்கும் அதன் மக்களுக்கும் பொருளாதார நன்மைகளை கொண்டு வரும் பல நாடுகளுக்கான தொடர் பயணங்கள் குறித்தும் அவர் தமதுரையில் குறிப்பிட்டார்.

பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles