
புத்ரா ஜெயா நவ 23-
மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்திற்கு உதவிகளை வழங்கிய தொடர்பு துறை அமைச்சர் பாமி பாட்சில் அவர்களுக்கு சங்கத்தின் சார்பில் நேற்று நன்றி மற்றும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்திற்கு அமைச்சர் பாமி பாட்சில் பக்கப்பலமாக இருந்து வருவது மிகவும் பாராட்டுக்குரியது என்று சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் தெரிவித்தார்.
காசே அவனா திட்டத்தின் கீழ் மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தைச் சேர்ந்த 17 பேருக்கு நிதியுதவி கிடைக்க அமைச்சர் பாமி பாட்சில் பேருதவி புரிந்துள்ளார்.
சங்கத்தைச் சேர்ந்த மேலும் பலருக்கு இந்த நிதியுதவி கிடைக்க உதவி புரிய வேண்டும் என்று சங்கத்தின் சார்பில் நேற்று அமைச்சர் பாமி பாட்சிலிடம் கடிதம் கொடுக்கப்பட்டது.
புத்ரா ஜெயாவில் உள்ள அலுவலகத்தில் மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன், துணை தலைவர் காளிதாஸ் தியாகராஜன், உதவித் தலைவர் காளிதாசன் இளங்கோ மற்றும் சங்கத்தின் உறுப்பினர் தீபன் ஆகியோர் அமைச்சர் பாமி பாட்சிலை சந்தித்து நன்றியைத் தெரிவித்துக் கொண்டதோடு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்த அமைச்சரின் சிறப்பு அதிகாரி டத்தோ சிவபாலன் அவர்களுக்கும் சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

