

சிகாமாட், டிச 11-
நாட்டில் பெய்து வரும் அடைமழையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் உரிய உதவிகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில் ஜொகூர் மாநிலத்திலும் மக்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டனர்.
ஜொகூர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நன்கொடைகளை யும் உணவுகூடைகளையும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வழங்கினார்.
கடந்த இரு தினங்களாக ஜோகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவர்கள் (KIR) அத்தியாவசியப் பொருட்களை நன்கொடையாகப் பெற்றனர்.
குறிப்பாக இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும் போது மக்களின் நலனுக்கு எப்போதும் முன்னுரிமை அளிப்பதை உறுதி செய்வதற்கான மதானி அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்த முயற்சி என்று பிரதமரின் சிறப்புப் பணி அதிகாரி சண்முகம் மூக்கன் தெரிவித்தார்.
சிகாமாட், தங்காக் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய உதவிகளை மடானி அரசாங்கம் மூலம் வழங்கப் படுகிறது என்று அவர் சொன்னார்.

