பெரிக்கத்தான் நேஷனல் துணை தலைவர்களில் ஒருவராக புனிதன் நியமனம்!

கோலாலம்பூர் டிச 12-
அடுத்த பொதுத் தேர்தலை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணி தற்போது தனது உயர்மட்ட பொறுப்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது.

டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் மீண்டும் பெரிக்கத்தான் நேஷனல் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

பாஸ் கட்சி தலைவர் டான்ஸ்ரீ ஹாடி அவாங், கெராக்கான் கட்சியின் தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லாவ், டத்தோஸ்ரீ ஹம்ஸா ஜைனுடின் மற்றும் மலேசிய இந்தியர் மக்கள் கட்சியின் தலைவர் பி.புனிதன் ஆகியோர் துணை தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

டத்தோஸ்ரீ அஸ்மின் அலி பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணி செயலாளராக உள்ளார்.

மலேசிய இந்தியர் மக்கள் கட்சியின் துணைத் தலைவர் எஸ்.சுப்பிரமணியம் மற்றும் கே.மணிமாறன் ஆகியோர் உச்சமன்ற உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles