
நாகை, டிச 12-
அரசியல் பயணத்தில் வந்துள்ள விஜய் நீண்ட தூரம் செல்ல நிறைய பாடங்களை கற்க வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அரசியலில் ஒவ்வொரு நாளும் புதிய பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும்.
விஜய்யும் இந்த பாதையில் சென்றுதான் ஆக வேண்டும். அவர் வேறு ஒரு துறையில் சாதனை படைத்துவிட்டு அரசியல் துறைக்கு வந்திருக்கிறார்
இந்நிலையில் வந்த உடனேயே எல்லோருக்கும் எல்லாம் தெரிந்துவிடும் என்று சொல்லமுடியாது.
எனவே, விஜய் தனது பயணத்தில் எல்லாவற்றையும் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று
அவர் கூறினார்

