
கோலாலம்பூர் டிச 22-
கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு பண்டார் துன் ரசாக் செராஸ் மூன்றரை மைல் ஆம்பர் வர்த்தக பிளாசா வில் நேற்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
Persatuan Masyarakat Satu Khemah இயக்கத்தின் தலைவர் ஜொனாதன் வேலா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 200 க்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
இதில் 60 க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
உதவிகள் தேவைப்படும் மக்களுக்கு உதவும் வகையில் கூட்டரசு மேம்பாட்டு தொழில் துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் மூலமாக 100 குடும்பங்களுக்கு உணவுக் கூடைகள் வழங்கப்பட்டன.
பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிஸா மற்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அரசியல் செயலாளர் டத்தோ அஸ்மான் ஆதரவோடு இந்த நிகழ்வு மிகவும் விமரிசையாக நடைபெற்றதாக ஜொனாதன் வேலா தெரிவித்தார்.
வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி மகிழும் மக்களுக்கு அவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளையும் ஜோர்தான் வேலா தெரிவித்துக் கொண்டார்.

