கல்வி ஒரு தடை கல் அல்ல! மன உறுதியே வெற்றிக்கு காரணம் என்கிறார் மகேஸ்வரி!

கோலாலம்பூர் டிச 23-
கல்வி என்பது ஒரு தடைக்கல் அல்ல. மன உறுதி இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று கூறுகிறார் மகேஸ்வரி ராஜசிங்கம்.

வாழ்நாள் முழுவதும் கல்வியை தொடர வேண்டும் என்ற மன உறுதியே இன்று ஒப்பனை துறையில் ஒரு முத்திரையை பதிக்க முக்கிய காரணமாக உள்ளது.

கோலாலம்பூர் லுக்ஸ் செலூன்’ அழகு ஒப்பனை நிறுவனத்தின் இயக்குனர் மகேஸ்வரி ராஜாங்கம் தற்போது ஒப்பனை துறையில் முழு தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர் கல்வி மற்றும் புதிய திறன்களை வளர்த்துக் கொள்வதின் மூலம் பிரகாசமான எதிர்காலத்தை நம்மால் அடைய முடியும்.

2025 ஆண் பிப்ரவரி மாதத்தில் திறப்பு விழா காணவிருக்கும் லுக்ஸ் செலூன் த மகேஸ்வரியின் மன உறுதி மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது என்றால் அது மிகையாகாது.

அழகு ஒப்பனையில் லுக்ஸ் செலூன் தனது வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவையை வழங்கும் என அவர் சொன்னார்.

மலேசிய திறன் மேம்பாட்டு இலாகாவால் மதிப்பிடப்படும் மலேசிய திறன் மேம்பாட்டு சான்றிதழ் 1 மற்றும் 2 அடைவை தமது நிறுவனம் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவையை வழங்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் இந்த அடைவை தமது நிறுவனம் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles