
ஜெருசலேம்: டிச 26-
‘காஸாவில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு குழந்தை கொல்லப்படுவதாக ஐ.நா., அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது.
காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் இன்னமும் ஓயவில்லை.
எங்கு நோக்கிலும் குண்டு சத்தம் ஒலித்துக் கொண்டே இருக்க, போரின் விளைவுகள் குறித்து உலக நாடுகள் அதீத கவலை தெரிவித்து வருகின்றன.
காஸாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 45,338ஆக உயர்ந்துள்ளதாக பாலஸ்தீனம் அறிவித்துள்ளது.

