சீனப் பெருநாளை முன்னிட்டு 23, 800 வவுச்சர்களை விநியோகிக்க RM 4.76 மில்லியனை அரசு ஒதுக்கியுள்ளது!

ஷா ஆலம், டிசம்பர் 26: அடுத்த மாதம் சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு தலா RM 200 மதிப்புள்ள மொத்தம் 23,800 கோ ஷாப்பிங் ஃபெஸ்டிவல் வவுச்சர்கள் விநியோகிக்கப்படும் என்று வறுமை ஒழிப்புக்கான EXCO தெரிவித்துள்ளார்.

56 மாநில சட்டமன்றங்களில் (DUN) தேவைப்படும் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குழுக்களின் தேவைகளை இலக்காகக் கொண்ட இந்த திட்டம் RM 4.76 மில்லியன் ஒதுக்கீட்டை கொண்டது என்று வி பாப்பாராய்டு கூறினார்.

“பெறுநர்களுக்கான விநியோகம் மாநில சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களால் மேற்கொள்ளப்படும்” என்று அவரை தொடர்பு கொண்டபோது கூறினார்.

அவரைப் பொறுத்தவரை அந்தந்த சட்டமன்ற உறுப்பினர், தொகுதி ஒருங்கிணைப்பாளர்களும் உண்மையிலேயே உதவி தேவையுள்ள பெறுனர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டார்..

“தேவைப்படுபவர்களுக்கு உதவுவதில் கவனம் செலுத்துமாறு பிரதிநிதிகளையும் ஒருங்கிணைப்பாளர் களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்”.

“ஒவ்வொரு முறையும் ஒரே நபருக்கு உதவி செய்ய வேண்டாம்”. “நாம் புதியவர்களையோ அல்லது உண்மையிலேயே தகுதியுள்ளவர்களையோ தேட வேண்டும், ஒவ்வொரு ஆண்டும் அதே நபர்களுக்கு (உதவி தேவைத் படாதவர்களுக்கு) கொடுப்பதை ஒரு நடைமுறையாக மாற்றக்கூடாது” என்று அவர் கூறினார்.

சீனப் புத்தாண்டைத் தவிர, சிலாங்கூரின் இந்த பராமரிப்பு முறை (ஐ. எஸ். பி) ஹரி ராயா மற்றும் தீபாவளியைக் கொண்டாடும் வறிய குடும்பங்களுக்கும் வழங்கப்படுகிறது.

ஜோம் ஷாப்பிங் பெருநாள் வவுச்சர்களுக்காக RM12 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீருதீன் ஷாரி 2025 ஆம் ஆண்டு பட்ஜெட் உரையில் அறிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles