ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோர்ட்டு மலை பிள்ளையார் கோவிலில் மக்கள் பெரும் அளவில் திரண்டனர்!

கோலாலம்பூர், ஜன 1-
2025 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இன்று கோலாலம்பூர் கோர்ட்டு மலை பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

காலையிலேயே சிவஸ்ரீ சிவானாந்தா குருக்கள் தலைமையில் சிறப்பு பூஜையில் கலந்து கொள்ள மக்கள் பெரும் அளவில் திரண்டனர்.

சிறப்பு பூசைக்கு பின்னர் ஆயிரக்கணக்கான மக்களுக்கு சுவையான அன்னதானமும் பரிமாறப்பட்டது.

நாட்டில் புகழ்பெற்ற வர்த்தக பிரமுகர் ராமா அவர்கள் தமது நிறுவனத்தின் சார்பில் அன்னதானம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles