இந்திய பினாங்கு உறவு & ஒத்துழைப்பை இன்னும் பலப்படுத்த முதலமைச்சர் வலியுறுத்து

பினாங்கு, ஜன 6: காலை 11. 30 மணிக்கு தனது உரையை துவக்கிய மாநில முதல்வர் சௌ கொன் யாவ் வருகைத் தந்திருந்த அனைவரையும் வரவேற்று நன்றியை தெரிவித்துக்கொண்டார் .

அவர் மீண்டும் ஒரு முறை பினாங்கில் கோடோ என்னும் உலக தமிழ்வம்சாவளி மாநாட்டை நடத்த ஆர்வமாக உள்ளதாக கூறினார். தமிழர்களிடமுள்ள திறமைகளையும் தனது உரையில் பாராட்டினார்.

இந்த மாநாடு தமிழ் நாட்டுக்கும் பினாங்கு மாநிலத்திற்கும் உள்ள நெருக்கத்தை காட்டுவதுடன், இதுப்போன்ற தொடர்ச்சியான முயற்சிகள் வழி நாம் தொடர்ந்து நெருங்கி வர வழி வகுக்கிறது. மேலும், இது நாம் பொருளாதாரத்தில் சிறந்து விளங்க வழி வகுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து, இந்த மாநாட்டினை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்து, சிறப்பு மாநாட்டு மலரையும் வெளியிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles