ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தீ – 80 விழுகாடு சேதம்!!

ஆயர் தாவார்,ஜன06: ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் ஏற்பட்ட திடீர் தீ சம்பவத்தால் ஆசிரியர்களும் மாணவர்களும் அதிர்ச்சிக்குள்ளான நிலையில் பெற்றோர்கள் மற்றுக் பொது மக்களிடையே பெரும் பரப்பரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலையில் எதிர்பாராத நிலையில் தலைமையாசிரியர் அறையிலிருந்து தீ பற்றியதாக நம்பப்படும் நிலையில் 80 விழுக்காடு கட்டடம் இத்தீயினால் சேதமுற்றது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் அறிந்து அப்பள்ளிக்கூடத்திற்கு விரைந்த புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரின் இந்திய நலப்பிரிவு சிறப்பு அதிகாரி கோ.தினகரன் ஆசிரியர்களும் மாணவர்களும் பாதுகாப்பா இருப்பதாக உறுதி அளித்தார்.

மேலும்,தீயணைப்பு படையினர் சுமார் 30 நிமிடத்தில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி,இச்சம்பவம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினருக்கு தகவல் தெரிவித்து விட்டதாக கூறிய அவர் பந்தாய் ரெமிஸ் சட்டமன்ற உறுப்பினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு தீயணைப்பு மற்றும் காவல்துறையினர்களிடம் நிலவரத்தை கேட்டறிந்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

இச்சம்பவம் குறித்த விசாரணையை காவல்துறையும் தீ ஏற்பட்டதற்கான காரணத்தை தீயணைப்பு படையும் கண்டறியும் என்பதையும் குறிப்பிட்ட அவர் இச்சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் யாரும் தவறான அல்லது உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்ப வேண்டாம் எனவுன் கேட்டுகொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles