


டமான்சாரா, ஜன 6-
தைப்பொங்கல் தமிழ் புத்தாண்டு வரும் ஜனவரி 14 ஆம் தேதி விமரிசையாக கொண்டாடப்படும் வேளையில் டமான்சாரா நாடாளுமன்ற தொகுதியில் பொங்கல் விழா கொண்டாட்டம் இப்போதே களைக் கட்டத் தொடங்கி விட்டது.
டமான்சாரா நாடாளுமன்ற தொகுதியில்
தைப்பொங்கல் விழா கொண்டாட்டத்திற்கான பொருட்களை டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ நேரடியாக மக்களுக்கு எடுத்து வழங்கினார்.
டாமான்சாரா நாடாளுமன்ற மக்கள் சேவை மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புக்கிட் லஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் புவா பெய் லிங்கும் கலந்து கொண்டார்.
தைப்பொங்கல் மலேசியாவில் மிகவும் பிரபலமாக கொண்டாடப்படும் ஒரு விழாவாகும்
அனைத்து இன மக்களுக்கும் நன்கு அறிந்த ஒரு பண்பாட்டு விழாவாகும் என்று டமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினருமான கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
தைப்பொங்கல் விவசாயத்தின் வெற்றியை குறிக்கும் விழா மட்டும் அல்ல, ஒற்றுமையையும் நன்றி உணர்வையும் பறைசாற்றும் உன்னத பெருவிழா என்று அவர் சொன்னார்.
பல்லின மக்கள் வாழும் மலேசிய திருநாட்டில் மடானி அரசாங்கத்தின் தைப்பொங்கல் விழா விழா சிறப்பாக நடைபெற மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் உற்சாகத்துடன் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் 400 பேருக்கு பொங்கல் கொண்டாட்டத்திற்கான பொருட்களை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ நேரடியாக எடுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

