இந்தியாவை உலக சுற்றுலாத் தலமாக்க வேண்டும்: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் வேண்டுகோள்

புவனேஸ்வர்: ஜன 9-
இந்தியாவை உலக சுற்றுலாத் தலமாக்க வெளிநாடுவாழ் இளம் இந்தியர்கள் முன்வர வேண்டும் என்று வெளிநாடு வாழ் இந்தியர் மாநாட்டில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.

18ஆவது வெளிநாடுவாழ் இந்தியர் மாநாடு ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நேற்று தொடங்கியது.

3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை தொடங்கிவைத்துப் பேசிய ஜெய்சங்கர், “இந்தியாவை ஒரு சுற்றுலாவுக்கான மையமாக மாற்ற வேண்டும் என்னும் பிரதமர் மோடியின் விருப்பத்தை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.

வெளிநாடுவாழ் இந்தியர்கள், வெளிநாட்டில் இருந்து தங்களுக்கு சமமான இளம் நண்பர்களை அழைத்து வர வேண்டும்.

அவர்கள், நமது தனித்துவமான வளமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை ஆராய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி, மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.

மாநாட்டின் இறுதி நாளான நாளை மறுநாள் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles