இவ்வாண்டு 16,800 மாணவர்கள் பள்ளிக் கல்வி உதவியைப் பெறுவார்கள் – எம்பிஐ

ஷா ஆலம், ஜன 9: இந்த ஆண்டு, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 16,800 மாணவர்கள் எம்பிஐ மூலம் பள்ளிக் கல்வி உதவியைப் பெறுவார்கள்.

ஒவ்வொறு தொகுதிகளிலும் 300 மாணவர்களுக்கான ஒதுக்கீடு, 2025 பள்ளி அமர்வுக்கான பெற்றோரின் செலவுகளின் சுமையை குறைக்கும் என்று எம்பிஐ நம்புகிறது என அதன் தலைவர் கூறினார்.

“தேதி முடிவு செய்யப்பட்டதும் விண்ணப்பத்தின் விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும். உதவிக்கான படிவமும் இன்னும் விவாதத்தில் உள்ளது. இதில் பள்ளி சீருடை வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

“பெற்றோரின் செலவினங்களின் சுமையைக் குறைக்க உதவுவதில் எம்பிஐ அறக்கட்டளை உறுதிபூண்டுள்ளது,” என்று அஹ்மட் அஸ்ரி சைனல் நோர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

சிலாங்கூரில் பல்வேறு கல்வி மேம்பாட்டு நிகழ்ச்சி நிரல்களை வெற்றியடைய செய்ய எம்பிஐ அறக்கட்டளை இந்த ஆண்டு தோராயமாக RM15 மில்லியனை ஒதுக்கும் என்று அஹ்மட் அஸ்ரி தெரிவித்தார்.

கடந்த ஆண்டு, குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த 16,800 மாணவர்களுக்கு RM1.7 மில்லியனை எம்பிஐ ஒதுக்கியது. ஒவ்வொரு பெறுநருக்கும் RM100 மதிப்புள்ள பள்ளிக் கல்வி உதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles