ரபிஸி ரம்லிக்கு டத்தோஸ்ரீ விருது! சுரேஸ் குமாருக்கு டத்தோ விருது

சிரம்பான், ஜன 15-
நெகிரி செம்பிலான் ஆளுநர், துவாங்கு முஹ்ரிஸ் இப்னி அல்மார்ஹும் துவாங்கு முவாவிரின் 77ஆவது பிறந்த நாளை முன்னிட்டுப் பொருளாதார அமைச்சர் ரஃபிசிக்கு டத்தோஶ்ரீ விருது வழங்கப்படுகிறது.

இம்முறை மொத்தம் 555 பேர் விருதுகளும் பதக்கங்களும் பெறவுள்ள நிலையில், அந்தப் பெயர் பட்டியலில் ரஃபிசியின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

பிகேஆர் கட்சியின் துணை தலைவரும் பண்டான் நாடாளுமன்ற தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ரஃபிசி, Darjah Seri Setia Negeri Sembilan Yang Amat Cemerlang (SSNS) விருதை பெறும் நிலையில் இனி அவர் டத்தோஶ்ரீ என்று அழைக்கபடுவார்.

இம்முறை டத்தோ விருது பெறுவோர் கள் பட்டியலில் Tanco Land SDN BHD நிறுவனத்தின் இயக்குநர் ஆர்.சுரேஷ்குமார் இடம் பெற்றுள்ளார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தம்பூன் நாடாளுமன்ற தொகுதி இந்தியர் பிரிவு அதிகாரியாக பணியாற்றி வரும் இவரின் அளப்பரிய சேவைகளை பாராட்டும் வகையில் டத்தோ விருது வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles