சுங்கைபட்டாணி ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் பொங்கல் வைபவம்.

சுங்கைபட்டாணி 16-

இங்குள்ள ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தில் பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.


முன்னதாக ஆலய நிர்வாகித்தினர் மற்றும் வந்திருந்த பக்தர்கள்,முருகப் பெருமானை வேண்டி மனதிலே நிறுத்தி ,பானையில் பாலை ஊற்றினர்.எஸ்.லோகநாதன் குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில் தேவஸ்தானத்தின் ஆலய அறங்காவலர் டத்தோ வீ.நடராஜன்,கெடா மாநில எழுத்தாளர் கங்கோத்ரி தலைவர் கி.சச்சிதானந்தன்,மஇகா கெடா மாநிலத் தலைவர் எஸ்.கே.சுரேஸ் அதன் செயலாளர் ப.பிரபா,பொருளாளர் ஆர்.எஸ்.தில்லைமுன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.ஆறுமுகம் ஆகியோர் பொங்கல் விழாவில் கலந்துக் கொண்டது மேலும் இங்கு கொண்டாடப்பட்ட விழாவிற்கு சிறப்புச் சேர்த்தது.


தேவஸ்தானத்தின் தலைவர் பெ.இராஜேந்திரன்,பக்தர்கள் அனைவரிடம் தேவஸ்தான சார்பில் பொங்கல் வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டார்.பொங்கல் வைபவ கொண்டாட்டம் மிகச் சிறப்பாக இங்குள்ள ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தில் கொண்டாட்டப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles