சோம சுந்தரம் தமிழ்ப்பள்ளியின் நேர்த்திநிறை விழா மற்றும் பாலர் பள்ளியின் விருதளிப்பு விழாவெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

சுங்கைபட்டாணி ஜன 16-

இங்குள்ள சோமசுந்தரம் தமிழ்ப்பள்ளியின் நேர்த்திநிறை விழா மற்றும் பாலர் பள்ளியின் விருதளிப்பு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவை முன்னாள் தலைமை ஆசிரியர் உயர்திரு தேவார சுப்பிரமணியம் அவர்கள் சிறப்புரையாற்றி அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.
ஒவ்வொரு ஆண்டும் , உயர்திரு டான் ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் சோம சுந்தரம் மற்றும் நன்கொடையாளும் நனிச் சிறந்த மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கி சிறப்புச் செய்யப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் கல்வி, புறப்பாட நடவடிக்கைகள் மற்றும் நன்னெறிப் பண்பில் சிறந்த விழங்கிய ஆறாம் ஆண்டு மாணவர்களான இரோஷினி த/பெ தனபாலன் மற்றும் இரிஷிகேசரன் த/பெ சுப்பிரமணியம் , ஆகிய இரு மாணவர்களுக்கும் தங்கப் பதக்கம் பெற்றவர்கள் ஆவர்.
சோம சுந்தரம் தமிழ்ப்பள்ளியின் நேர்த்திநிறை விழா மற்றும் பாலர் பள்ளி விருதளிப்பு விழா சிறப்பாக நடைபெற உதவிய உயர்திரு டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் சோம சுந்தரம் அவர்களுக்கும் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் திரு. ப.பிரபாகரன் தனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
பள்ளியின் வாரியக்குழுத் தலைவர் குணாளன் மற்றும் செயலவையினருக்கும் நன்கொடை வழங்கிய கெடா மாநில இந்து சங்கத் தலைவர் எஸ். பரமசிவம் மற்றும் நன்கொடை நெஞ்சங்களுக்கும்,பள்ளியின் ஆசிரியர்களுக்கும்,மாணவர்களின் பெற்றோர்களுக்கும்,இந்த நிகழ்வு மிகவும் உறுதுணையாக இருந்து வெற்றி அனைத்து வகையிலும் முழு ஒத்தழைப்பினை வழங்கிய பெ.ஆ.சங்கத் தலைவர் பிரபாகரனின் சேவை அளப்பரியதாக அமைந்ததாகவும் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதிகிறிஷ்திமா கண்ணன் நன்றிதனை தெரிவித்துக் கொண்டார்.
இப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர்களான முனியாண்டி,தேவார மணியம், மற்றும் கோ.புண்ணியவான் மூவருக்கும் இந்த நிகழ்வில் சிறப்புகள் செய்யப்பட்டன.பாலர் பள்ளி மாணவர்களின் படைப்புகளும்,மாணவர்களின் குறு நாடகங்களும் இந்த நிகழ்வில் மிகவும் பாராட்டப்படும் வகையில் அமைந்திருந்தன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles