

சன்வே, மே 2-
நேற்று உலகம் முழுவதும் சித்திரை பெளர்ணமி திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
மலேசியாவில் உள்ள கோவில்களில் சித்திரை பெளர்ணமி திருவிழா கலை கட்டியது.
அந்த வகையில் நாட்டில் புகழ்பெற்ற
சிலாங்கூர், பண்டார் சுன்வே ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தின் நீண்டகால நிலப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வி. பாபாராயுடு தெரிவித்துள்ளார்.
சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் மிஷால் எங் மேப் சீக், சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சென் உள்ளிட்டோர் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்துடன், ஆலய மேம்பாட்டிற்காக தலா ரிம 10,000 மானியம் வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.
சித்திரை பெளர்ணமி திருவிழாவில் கலந்து கொண்ட இவர்களுக்கு ஆலய நிர்வாகத்தினர் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்தனர்.
அந்த வகையில் சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினரின் அதிகாரி நவா அவர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

