புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும், தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் சிலாங்கூர் உறுதி

ஷா ஆலம், மே 2: தொழிலாளர்களின் பல்வேறு திறன்களை மேம்படுத்துவதோடு, அவர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் சிலாங்கூர் மாநில நிர்வாகம் தொழிலாளர் துறைக்கு தனது முழுமையான அர்ப்பணிப்பைத் தொடர்ந்து வழங்கும்.

மாநில மனிதவள ஆட்சிக் குழு உறுப்பினர் வி.பப்பாராய்டு கூறுகையில், டத்தோ மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையிலான மாநில அரசாங்கம், தொழிலாளர்களின் உரிமைகளான நியாயம், ஊதியப் பட்டுவாடா மற்றும் பாதுகாப்பான பணிச்சூழல் போன்றவற்றைப் பாதுகாக்கும் என்றார்.

“இன்று நாம் தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகிறோம். சிலாங்கூரின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் அனைத்து தொழில்களும் ஒரு பலமாகும். முதலாளிகள் தங்கள் ஊழியர்களைப் பங்காளிகளாக நடத்த வேண்டும்.

“நமது நாட்டின் வளர்ச்சியில் ஒத்துழைத்து பங்களித்த அனைத்து தொழிலாளர்களுக்கும் நன்றி. நாட்டின் முன்னேற்றத்திற்காக தங்கள் சேவையையும் ஆற்றலையும் அர்ப்பணித்த அனைவருக்கும் இனிய தொழிலாளர் தின வாழ்த்துகள்,” என்று இன்று கொண்டாடப்படும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு காணொளிப் பதிவு மூலம் அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles