
மதுரை, ஜன 16-
உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கியது!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் அமைச்சர் மூர்த்தி உள்ளிட்ட அமைச்சர்களும் பங்கேற்றனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 1,000 காளைகள் பாரம்பரியமிக்க வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிட விழா குழுவும் , மாவட்ட நிர்வாகமும் முடிவு செய்துள்ளனர்.
500 மாடுபிடி வீரர்களும் களம் காண்கின்றனர்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
தொடர்ந்து அலங்காநல்லூர் கோவில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டன. அதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சிறந்த வீரர், காளைக்கு பரிசு; உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளையாக தேர்தெடுக்கப்படும் காலைக்கும் முதல்வர் சார்பில் டிராக்டர் வழங்கப்படுகிறது.
சிறந்த வீரராக தேர்தெடுக்கப்படும் மாடுபிடி வீரருக்கு துணை முதல்வர் சார்பில் கார் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

