


ஷா ஆலம், ஜன 20-
தித்திக்கும் தைப்பொங்கல் தமிழர் திருநாளை முன்னிட்டு
மலேசிய அறிவுசார் தலைமுறை கூட்டமைப்பு இயக்கத்தின் ஒத்துழைப்பில் ம.இ.கா கோத்தா ராஜா தொகுதியின் தைப்பொங்கல் விழா நேற்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
சிலாங்கூர் மாநில ம இகா தலைவர் டத்தோ சங்கர் ஐயங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த தைப்பொங்கல் விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர்கள் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கலை முன்னிட்டு நடத்தப்பட்டு வரும் தைப்பொங்கல் தமிழர் திருநாள் விழாவில் இம்முறை அதிகமான கலந்து கொண்டது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று அவர் சொன்னார்.
இதனிடையே, தைப்பொங்கல் திருநாளின் முக்கியத்துவம் குறித்து இளம் தலைமுறையினர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பொங்கல் விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக ம இகா தேசிய உதவித் தலைவர் டத்தோ அஜோசன் தமது உரையில் தெரிவித்தார்.
ம இகா தேசிய ஊடக பிரிவுத் தலைவர் சிவசுப்பிரமணியம், டத்தோ புத்ரி சிவம், ராஜன் உட்பட பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

