
சுங்கைபட்டானி ஜன 21-
பல லட்சம் கணக்கான பக்தர்கள் திரளும் சுங்கைபட்டாணி தைப்பூசம் விழா பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி மிக விமரிசையாக கொண்டடுவதற்கு சுங்கைபட்டாணி ஶ்ரீ சுப்பிரமணிய தேவஸ்தானம் பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
சமய நெறியோடு தைப்பூச விழா திகழ வேண்டும் என்பதில் மலேசிய இந்து சங்கம் கெடா மாநிலப் பேரவை, காவல் துறை மற்றும் அரசியல் அமைப்புகள் மற்றும் அரசு சாரா அமைப்புகளும் பெரும் முயற்சிகள் செய்து வருகின்றன.
தாரை தப்பட்ட இசையோடு காணிக்கயினை செலுத்தும் பக்தர்கள் குறிப்பாக காவடி எடுக்கும் பக்தர்கள்,இரத காவடிகளை இழுத்துச் செல்லும் பக்தர்கள் சமய நெறிகளை கடைப்பிடித்தால் இன்னும் நமது வழிபாடு சிறப்புற அமையும் என மலேசிய இந்து சங்கம் கெடா மாநிலப் பேரவை நேற்று முன் தினம் இங்குள்ள தனது மண்டபத்தில் தாரை தப்பட்ட களைஞர்களுடன் சிறப்புச் சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்தது.
தாரை தப்பட்டை கலைஞர்களுக்கு அடையாளம் பொருந்திய பெயர் அட்டையினை வழங்கி தைப்பூச விழாவில் அதை அணிந்து வருவதோடு ஒரே மாதிரியான சீருடையினை அணிந்து தாரை தப்பட்டை இசையை இசைக்க வேண்டும் என அவர்களுடன் கலந்து ஆலோசித்தது.
தைப்பூசவிழா சமய நெரியோடு திகழ்வதற்கு
தாரை தப்பட்டை கலைஞர்களின் ஒத்தழைப்பு மிக அவசிவம் என அவர்களை கேட்டு கொண்டதிணங்க அவர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர்.
இந்த நிகழ்வில் கோலமூடா மாவட்ட காவல் துறை அதிகாரிகள்,மாநில மந்திரி பெசாரின் இந்திய பிரிவு சிறப்பு அதிகாரி ஜி.கே.குமரேசன்,ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் செயலாளர் மு.நந்தகோபால், மலேசிய இந்து சங்கத்தின் முன்னாள் தேசியத் தலைவர் ஆர்.எஸ்.மோகன் ஷான், மஇகா சுங்கைபட்டாணி தொகுதித் தலைவர் ஆர்.எஸ்.தில்லை,முன்னாள் புக்கிட் செலம்பாவ் சட்டமன்ற உறுப்பினர் வீ.ஆறுமுகம் ஆகியோர் இந்த சிறப்புச் சந்திப்பு நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.
மலேசிய இந்து சங்கம் கெடா மாநிலப் பேரவையின் தலைவர் விவேக ரத்னா எஸ்.பரமசிவம் தலைமையில் சமயத்திற்கு என பல அரிய முயற்சிகளை அவ்வப்போது எடுத்து வருவது பாராட்டுக்குரியது என பிகே.குமரேசன் தெரிவித்தார்.

