பிறை MPKK மேலும் திறன்பட செயல்பட நான்கு துணை குழுக்களை அமைத்தார் ஸ்ரீ சங்கர்

பிறை, ஜன 23-
பினாங்கு மாநிலத்தில் பிறை எம்பிபிகே எனப்படும் கிராமத் தலைவர்கள் தொகுதி மக்களுக்கு சிறப்பான முறையில் சேவையாற்றி வருகிறார்கள்..

அந்த வகையில் பிறை எம்பிபிகே தலைவர்கள் மேலும் திறன் பட செயல்பட அதன் தலைவர் ஸ்ரீ சங்கர் நான்கு துணை குழுக்களை அமைத்துள்ளார்.

MPKK பிறை கம்போங் மெயின் ரோடு மேம்பாடு, தாமான் செனாங்கி தத்தெடுத்து திட்டம் மற்றும் தாமான் பிறை உத்தாமாவில் தூய்மைக் கோட்டை நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட முக்கிய விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

இதன் தொடர்பாக பிறை
MPKK தலைவர் ஸ்ரீ சங்கர் 4 துணை குழுக்களை அமைத்துள்ளார்.

பொருளாதாரம் மற்றும் தொழில் முனைவோர் குழுவுக்கு ஷமளாதேவி சுப்ரமணியம் பொறுப்பேற்றுள்ளார்.

சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குழுவுக்கு மோகன் துரைசாமி இளைஞர் விளையாட்டு பிரிவுக்கு பச்சைமுத்து தண்ணீர் மலை, சமய விவாகரங்கள் பிரிவுக்கு சுகாய்ரி பின் மூசா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மாதம் முதல் துணைக் குழுக் கூட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த முன்முயற்சிகள் நம் சமூகத்திற்கு பிறை தொகுதி மக்களுக்கும் நன்மைகளை கொண்டு வரும் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles