
கோலாலம்பூர் ஜன 23-
வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி உலகம் முழுவதும் தைப்பூசம் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இப்போதே மலேசியாவில் தைப்பூசம் கலை கட்டியிருக்கிறது.
மலேசியாவில் தைப்பூசத்தை முன்னிட்டு சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ரா ஜெயா, பேராக், ஜொகூர், நெகிரி செம்பிலான் மற்றும் பினாங்கு மாநிலங்களில் பொது விடுமுறை அனுசரிக்கப்படுகிறது.
இப்போது கெடா மாநில அரசு தைப்பூசத்திற்கு சிறப்பு விடுமுறையை அறிவித்துள்ளது.
அந்த வகையில் கெடா மாநில அரசு மற்றும் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் சனுசி ஆகியோருக்கு பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்த சிறப்பு விடுமுறையை பயன்படுத்தி கெடா மாநில இந்து பெருமக்கள் முருகப்பெருமானுக்கு தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாக டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்தார்.

