
சேலம்: ஜன 24-
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை சந்திக்கவில்லை எனவும், அவரை சீமான் சந்தித்தது போன்ற படத்தை நான் தான் எடிட் செய்து கொடுத்தேன் எனவும் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பரபரப்பு தகவலை வெளியிட்டார்.
இதனை மறுத்த சீமான், இவ்வளவு நாள் அவர் எங்கிருந்தார் என கேள்வி எழுப்பினார்.
இதுபற்றி இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் கூறியதாவது: பிரபாகரன்-சீமான் சந்திப்பு படம் எடிட் செய்யப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது என சீமான் கேட்டுள்ளார்.
இருவரும் சந்திப்பு எடிட் செய்யப்பட்டது என அதுவே ஒரு ஆதாரமாகத்தான் எடுத்துக்காட்டுகிறோம்.
அதுக்கு ஒரு ஆதாரத்தை எங்கிருந்து எடுத்துக் காட்டுவது. இந்த புகைப்படத்தை எப்படி எடிட் செய்தான் என டெமோ காண்பிக்க சொல்கிறார்.
உலகம் முழுவதும் புகைப்படம் எப்படி எடிட் செய்யப்படுகிறது என்பதை காண்பித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
பிரபாகரனை பொய் என்று நாங்கள் எப்போது சொன்னோம். அவரின் நண்பர் செங்கோட்டையனை இதுபற்றி சீமான் பேச சொல்லி மறுத்திருக்கலாமே. அவரை ஏன் பேசவிடாமல் தடுத்துள்ளனர்.
பெரியாருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டாம் என தெரிவித்த போது போனை துண்டித்து விட்டார்.
தொடர்ந்து உண்மைக்கு மாறான செய்திகளை சொல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

