உயர்கல்வி மாணவர்களுடன் பெற்றோர்களும் ஏம்ஸ்ட் பல்கலைக்கழகத்திற்கு வருகை மேற்கொள்கின்றனர்

ஈப்போ, ஜன.26: மாணவர்களையும் அவர் தம் பெற்றோர்களையும் அழைத்து சென்று ஏம்ஸ்ட் பலகலைக்கழக வளாகத்தை சுற்றி பார்க்கும் திட்டம் குறித்து மாநில கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக பேராக் மாநில ம இகா தலைவரும் தேசிய உதவித்தலைவருமாகிய டான்ஸ்ரீ எம்.இராமசாமி கூறினார்.

அதுமட்டுமல்லாது பி40 குடும்பத்திலுள்ள குழந்தைகளின் கல்வி தகுதியை உயர்த்தும் திட்டமாகவும் இக்கலந்துரையாடல் அமைந்திருந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் இத்திட்டத்தில் படிப்பை முடித்துக்கொண்ட பேரா மாநில இளைஞர்களுக்கு திவெட் கைத்தொழில் பாடதிட்டத்தை அறிமுகப் படுத்தும் திட்டவரைவையும் இக்கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கெடா சுங்கை பட்டாணியில் அமைந்திருக்கும் ஏம்ஸ்ட் பல்கலைக்கழகத்திற்கு வருகை மேற்கொள்ளும் திட்டம் வெற்றிபெற மாநில வியூக குழு, இளைஞர் பகுதி மற்றும் ஒட்டுமொத்த மாநில நிர்வாகத்தினரும் அவர்தம் கருத்தினை இக்கூட்டத்தில் பகிர்ந்துகொண்டனர் என்று அவர் பதிவிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles