
தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு, தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
இதைதொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை ஆதவ் அர்ஜூனா இன்று சந்தித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து வெளியேறிய பிறகு முதல் முறையாக திருமாவளவனை ஆதவ் அர்ஜூனா சந்தித்தார்.
தவெகவில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள ஆதவ் அர்ஜூனா மரியாதை நிமித்தமாக திருமாவளவனை சந்தித்து உள்ளதாக தகவல் வெளியாகியானது.
இந்நிலையில், திருமாவளவன் – ஆதவ் அர்ஜூனா சந்திப்பு பிறகு இருவரும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர்.
அப்போது ஆதவ் அர்ஜூனா கூறுகையில், ” தவெக கட்சி தலைவரும் சரி, அண்ணன் திருமாவளவனும் சரி ஒரே கருத்து, ஒரே கொள்கையில்தான் இருக்கிறோம். அதனால், நாங்கள் எதிர்துருவம் அல்ல. ஒரே துருவத்தில் கொள்கை அடிப்படையில் பயணம் எப்போதுமே இருக்கும். கொள்கை அடிப்படையில் நாங்கள் ஒற்றுமையாகதான் இருக்கிறோம்.
அவருடைய அறிவுரைகளை எடுத்துக்கொண்டு அதை செயல்களில் காட்டுவோம்” என்றார்.
தொடர்ந்து பேசிய திருமாவளவன், ” தமிழக அரசியலில் ஒரு புதிய அணுகுமுறையை தொடங்கி வைத்திருக்கிறார். பொதுவாக ஒரு கட்சியில் இருந்து விலகினாலோ அல்லது விலக்கி வைத்தாலோ அதை ஒரு பகையாக கருதுகின்ற ஒரு பாரம்பரியம் தான் அரசியல் களக்கில் நீண்ட காலமாக இருந்து வருகிறது.