
சென்னை: பிப் 2- அனைத்து ஆய்வு அறிக்கைகளிலும் பக்கத்துக்கு பக்கம் தமிழ்நாட்டின் செயல்பாடுகளுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்கப்படுகிறது.
ஆனால், நிதிநிலை அறிக்கையில் மட்டும் இந்த ஆண்டும் தமிழ்நாடு முழுமையாக புறக்கணிக்கப்படுவது ஏன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒன்றிய அரசின் பட்ஜெட் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூகவலைதள பதிவில் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒன்றிய நிதிநிலை அறிக்கை என்றாலே தமிழ்நாட்டை பொறுத்தவரை ஓரவஞ்சனைதானா? தமிழ்நாடு என்ற பெயர்கூட தொடர்ந்து இடம்பெறுவதில்லையே?
எத்தனையோ கோரிக்கைகளை முன்வைத்தோமே, அதில் ஒன்றைக்கூடவா உறுதிசெய்து அறிக்கையில் சேர்க்க மனம் வரவில்லை?
நெடுஞ்சாலைகள் – ரயில்வே திட்டங்கள் – கோவை, மதுரை மெட்ரோ ரயில் எதையுமே கொடுக்காதது ஏன், எது தடுக்கிறது?
வெற்றுச் சொல் அலங்காரங்களும், வஞ்சனையான மேல் பூச்சுகளும் கொண்ட அறிக்கையின் மூலமாக இந்திய நாட்டு மக்களை வழக்கம் போல் ஏமாற்றும் பாஜவின் நாடகம் தொடர்கிறது.
எந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளதோ, எங்கு பாஜ கூட்டணி ஆட்சியில் உள்ளதோ அந்த மாநிலத்துக்கு மட்டும்தான் திட்டங்களும் நிதியும் அறிவிக்கப்படும் என்றால் ‘ஒன்றிய’ நிதிநிலை அறிக்கை என இதனை அழைக்க வேண்டிய அவசியம் என்ன? இவ்வாறு அவர் கூறியுள்ளார்

