
சுங்கைபட்டாணி, பிப்-3
மஇகா கெடா மாநில தலைவர் எஸ்.கே.சுரேஸ் தலைமையில் கொண்டாடப்பட்ட இந்த வருட பொங்கல் விழா சரித்திரம் வாய்ந்த பொங்கல் விழாவாக அமைந்ததாக கெடா மாநில வட்டாரத்தில் மஇகா தலைவர்களால் புகழாரம் சூட்டப்பட்டன.
சுங்கைபட்டாணி ஜாலான் கோலக்கெட்டில் பகுதியில் அமைந்துள்ள நவதுர்கை அம்மன் ஆலய வளாகத்தில் மஇகா கெடா மாநில பொங்கல் விழா 2025 ஏற்பாடு செய்திருந்தது.
தொகுதித் தலைவர்கள், இளைஞர் பகுதியினர், மகளிர் பகுதியினர், சமயப் பகுதி,ஒற்றுமைப், புத்ரா, புத்ரி பகுதி மற்றும் மாநில முக்கிய பொறுப்பாளர்கள் என 400க்கும் அதிகமானோர் இந்த விழாவில் கலந்துக் கொண்டனர்.

பெண்களுக்கான கோலப்போட்டி, பூச்சரம் கட்டும் போட்டி, மணவர்களுக்கான வண்ணம் தீட்டும் போட்டி, இளைஞர்களுக்கான உறி அடிக்கும் போட்டி, பொங்கல் போட்டி என பல விதமான போட்டிகள் இதில் இடம் பெற்றன. வெற்றி பெற்ற போட்டியாளரகளுக்கு முறையே இதில் பரிசுகளும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்விற்கு முக்கிய பிரமுகராக தொழிலதிபர் டாக்டர் சிங்கப்பூர் சின்னையா மற்றும் அவரது துணைவியார் டாக்டர் ஜோபினா நாயுடு கலந்து இவ்விழாவினை மேலும்சிறப்பித்தனர்.

இதில் முக்கியமாக மஇகா கெடா மாநிலத் தலைவர் சுரேஸ் மற்றும் அதன் துணை தலைவர் டாக்டர் கலை இருவரும் உறி அடிக்கும் போட்டியில் பங்குக் கொண்டது நிகழ்வை கலகலப்பை ஏற்படுத்தியது.

