
ஈப்போ, பிப்.2: கடந்த 1972 ல் முதலாம் ஆண்டை தொடக்கிய புந்தோங் அரசினர் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்களது 60 வது அகவையில் மாணவர்களும் ஆசிரியர்களும் சந்தித்து, அனிசல் வெட்டி மகிழ்ந்தனர் என்று ஏற்பாட்டுக்குழு ஒருங்கிணைப்பாளரான மாரிமுத்து கூறினார்.
இக்குழுவில் இருக்கும் எனது அனைத்து நண்பர்களும் நல்லுள்ளம் கொண்டவர்கள். இவர்கள் அனுதினமும் புலனத்தில் வாயிலாக சந்தித்துக்கொண்டாலும் நேரடியாக சந்தித்து நலம் அறிவது சிறப்பாக இருக்கும் என்ற அடிப்படையில் இந்த மூன்றாவது சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு ஆண்டும் இச்சந்திப்பு நிகழ்வை செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இருப்பினும்
, இன்று இருப்பவர் நாளை இல்லாமல் போய் விடுகின்றனர் என்ற நிலைப்பாடு உருவாகி வருகிறது. அதனால் ஒவ்வொரு வரையும் தேடி கண்டு பிடித்து வரவழைப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. எங்கள் அனைவருக்கும் 60 வயது என்பதால் அனிசல் வெட்டி கொண்டாடியதாக முன்னாள் மாணவர் பெட்ரிக் பன்னீர் செல்வம் கூறினார்.
இந்நிகழ்வின் முதுகெலும்பாக பெட்ரிக் பன்னீர் செல்வம் , மாரிமுத்து அபுஹாசான் மற்றும் தாமும் இணைந்து செயல்பட்டதாக இந்நிகழ்வின் முதன்மை ஒருங்கிணைப்பாளரான ஜோ சாந்தி கூறினார்.
நட்பு மற்றும் ஒற்றுமை என்ற அடிப்படையில் 42 ஆண்டுகள் கழித்து எங்கள் முதல் சந்திப்பு நடந்தேறியது. இரண்டாவதாக 2020 ல் சந்தித்தோம் . மூன்றாவதாக எங்களின் 60 வது வயதில் அனைவரும் ஒன்றிணைந்தோம். அத்துடன், எங்களுக்கு போதித்த இரு ஆசிரியல்களான டேனியல் மற்றும் மேரி பரிபூரணத்தை சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியாக உள்ளது என்று சாந்தி குறிப்பிட்டார்.
50 வருடங்களுக்கு முன்னதாக போதித்த ஆசிரியர் என்ற அடிப்படையில் இன்னமும் என்னை அழைத்து சிறப்பித்த இந்த அனைத்து மாணவர்களுக்கும் நன்றியும் வாழ்த்துனையும் தெரிவித்துக்கொண்டார் மேனாள் ஆசிரியரும் கல்வி அதிகாரியுமான டேனியல். இவர்களின் இந்நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் தொடர வேண்டும் என்று அவர் கருத்துரைத்தார்.
1972 ல் தொடரப்பட்ட ஆசிரியை மாணவர்கள் தொடர்பு இன்னமும் இருந்து வருவதை கண்டு பெருமைப்படுவதாக மேனாள் தலைமையாசிரியர் மேரி பரிபூரணம் கூறினார். இவர்களின் பிள்ளைகள் நல்ல நிலையில் இருப்பதை கண்டு பெருமைப்படுகிறேன். இவர்களின் 60 வது சந்திப்பு மிகவும் மகத்துவமானமது என்று அவர் பாராட்டினார்.

