
பேரா, கம்போங் கெப்பாயாங்கில் எழுந்தருளியுள்ள அருள் மிகு சிவசுப்பிரமணியர் ஆலய தைப்பூச விழாவில் 30 ஆயிரம் பக்தர்கள் கலத்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேரா மாநிலத்தில் ஈப்போ கல்லுமலை தைப்பூச விழாவிற்கு அடுத்து அதிகமான பக்தர்கள் கலத்துக்கொள்ளும் ஆலயமாக இவ்வாலயம் விளங்குகிறது.
இந்த ஆலய வழிபாட்டிற்கு வரும் பக்தர்கள் இடையூறுகள் இன்றி காணிக்கை செலுத்த வழிபாடுகளை செய்யவும் போதிய வசதிகள் அனைத்தும் செய்யப்படுள்ளது என்று ஆலயத் தலைவர் சுந்தரராசு தெரிவித்தார்.
இவ்விழாவை முன்னிட்டு ஆலய வளாகத்தில் சிறு தொழில் வணிகள்கள் வர்தக்கத்தை மேற்கொள்ள இட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
ஆலய வளாகத்தில மது பானங்கள் விற்கவும் கூர்மையான ஆயுதங்கள் விற்கவும் தடைவிதிக்கப்படுவதாக அவர் கூறினார்.
இவ்விழாவை முன்னிட்டுவகடந்த மாதம் 28 ஆம் தேதி கொடியேற்றப்பட்டு தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.இந்த பூஜையிலும் பொது மக்கள் கலந்துக்கொள்ள அழைக்கப்படுகிறார்கள்
தைப்பூச நாளன்று ஆலய நிர்வாகம் அர்ச்சனை தட்டுகளை விற்கவிருப்பதால் வெளி நபர்கள் அர்ச்சனை தட்டுகளை விற்க தடை விதிக்கப்படுவதாகவும் சுந்தரராசு கூறினார்….

காவடி எடுக்கும். பக்தர்கள் சமய முறைப்படி காணிக்கைகளை செலுத்துவதுடன் நாதஸ்வர வாத்தியம் பக்தி பாடல்களை பாடல்கள் பாடி வருவது உத்தமம் .
ஆலயத் தைப்பூச விழா சிறப்புடன் நடைபெற அனைவரின் ஒத்துழைப்பு அவசியம் என்று வலியுறுத்தப்பட்டது்
வழக்கம்போல் இரத ஊர்வலம் தைப்பூச மறுநாள் மாலை மணி 5 .30 மணிக்கு சிறப்புடன் நடைபெற உள்ளது.
இவ்விழாவை முன்னிட்டு ஆலயத்தில் காலை மணி 5 மணி முதல் காலை மணி 6 வரை மற்றும் மாலை மணி 4 முதல் மாலை 5 .30;வரை பால் அபிஷேகம் நடைபெறும் நடைபெறும் என்ற தகவலையும் அவர் தெரிவித்தார்

