
புத்ரா ஜெயா, பிப் 14-
சொஸ்மா சட்டம் குறித்து மீள் ஆய்வு செய்யும்படி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று உத்தரவு பிறப்பித்தார் என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் பாமி பட்சில் அறிவித்தார்.
உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் விரைவில் நாடாளுமன்றத்தில் இந்த மீளாய்வுக்கான கூடுதல் தகவல்களை வழங்குவார் என்றும் அவர் சொன்னார்.
இன்று அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அமைச்சர் பாமி இதனை தெரிவித்தார்.
சொஸ்மா சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான ஓங் கியான் மிங், காலிட் சமாட், கஸ்தூரி பட்டு மற்றும் மரியா சின் ஆகியோர் கோரிக்கை வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இவர்கள் அனைவரும் சொஸ்மா சட்டத்தை ரத்து செய்ய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் பெரும் இன்னல்கள் அனுபவித்து வருகின்றனர்.
நீதிமன்ற விசாரணையில் தேவையற்ற தாமதங்கள் ஏற்படுகின்றன என்று கூறப்படுகிறது
எனவே, இந்த சட்டத்தின் அவசியத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.