


ஈப்போ, பிப்.15: பேராக் மாநிலத்திலுள்ள வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள சுமார் 500 மாணவர்களுக்கு புத்தகப்பை, பள்ளி சீருடைகள் மற்றும் இதர உபகரணங்கள் வழங்கி உதவியதாக சுவாரா ராக்யாட் இயக்கத்தின் தலைவரான டத்தோஸ்ரீ தியாகராஜன் பஞ்சாசரம் இங்குள்ள புந்தோங் அரசினர் தமிழ்ப்பள்ளியில் மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள் எடுத்து வழங்கும் நிகழ்வில் கலந்துக் கொண்ட போது கூறினார்.
இந்த மனிதநேய உதவியை பணிநிறைவு பெற்ற போலீஸ் அதிகாரிகள் இயக்கத்துடன் மூன்று முறை செய்யப்பட்டு வருகிறது.
இன்று புந்தோங் அரசினர் தமிழ்ப்பள்ளியில் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள 25 கிந்தா மற்றும் கோலகங்சார் மாவட்ட பள்ளியை சேர்ந்த 106 மாணர்களுக்கு இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
அதற்கு முன்னதாக தைப்பிங் வட்டாரத்திலுள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு, மஞ்சோங், தெலுக் இந்தான், ஈப்போ தொடர்ந்து சுங்கை வட்டாரத்திலுள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட்டதாக அவர் உறுதிப்படுத்தினார்.
இம்மாதிரியான உதவிகள் தேசிய மொழி பள்ளிகளில் பயிலும் இந்திய மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
அத்துடன், கல்வியில் பின் தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டி போதனைகள் நடைபெற அனைத்து உதவிகளும் செய்து தருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக டத்தோஸ்ரீ ப.தியாகராஜன் உறுதியுடன் கூறினார்.
இந்நிகழ்வு வெற்றி பெற பேராக் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் பேருதவியாக செயல்பட்டனர்.
அவர்களுக்கு நன்றியும் வாழ்த்தினையும் தெரிவித்துக்கொண்டார் பேராக் மாநில பணிநிறைவு பெற்ற பொலீஸ்படை அதிகாரிகளின் இயக்க தலைவர் புவனேஸ்வரன் கணேசன்.
எங்கள் இரு இயக்கத்தினரின் உன்னத நோக்கம் சிறப்பாக நிறைவேறியது.
குறிப்பாக நமது இந்திய மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற அடிப்படை நோக்கம் நிறைவு பெற்று வருவதாக அவர் கூறினார்.
இந்நிகழ்வின் நிறைவு விழாவில் சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்களை டத்தோ ஸ்ரீ ப.தியாகராஜன், க.புவனேஸ்வரன் மற்றும் அரசினர் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கி.அம்பிகா ஆகியோர் மாணவர்களுக்கு புத்தகப்பைகளை எடுத்து வழங்கினர்.