
மா.பவளச்செல்வன்
கோலகுபு பாரு, பிப் 14-
கல்வி அமைச்சின் சிறப்பு பணி அதிகாரி லோ கெர் சியான் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள நான்கு பள்ளிகளுக்கு நேரடி வருகை புரிந்தார்.
Sekolah Menengah Dato’ Haji Kamarudin, Sekolah Menengah Syed Mashor, SJKT Batang Kali மற்றும் SJKC Serendah பள்ளிகளுக்கு அவர் வருகை புரிந்தார்.

சிலாங்கூர் மாநில அரசுக்கும் அமைச்சுக்கும் இடையே உள்ள நெருக்கமான ஒத்துழைப்பு, கல்வித் தேவைகளை நன்கு பூர்த்தி செய்வதை உறுதி செய்வதற்கான ஒரு பயணமாக இது அமைந்துள்ளது.
கல்வி அமைச்சரின் சிறப்புப் பணி அதிகாரி லோ கெர் சியான் சிறப்பு வருகை பயணம் இங்குள்ள பள்ளி நிர்வாகத்திற்கு சிறந்த கவனத்தைப் பெறுவதற்கான சிறந்த வாய்ப்பாக அமைந்தது.
சிலாங்கூர் மந்திரி பெசாரின் அரசியல் செயலாளராகவும், பத்தாங் காலி சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளராக இருக்கும் சைபுடின் ஷாபி மேற்கொண்ட முயற்சியின் பலனாக இவரின் வருகை அமைந்துள்ளது.
பள்ளிகளுக்கு உடனடியாக தேவைபடும் உள்கட்டமைப்பு வசதிகளின் நிலையை இவர் நேரில் கேட்டறிந்தார்.

உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன், கோலகுபு பாரு சட்டமன்ற உறுப்பினர் பாங் சோக் தாவ், கவுன்சிலர் சுரேஸ் ராவ் மற்றும் உலு சிலாங்கூர் மாவட்ட கல்வி அதிகாரிகள், சமூக தலைவர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி மக்கள் சேவை மையம், பத்தாங் காலி சட்டமன்ற தொகுதி சேவை மையம் மற்றும் மாவட்ட கல்வி இலாகா ஆகியவை கூட்டாக இணைந்து பள்ளிகள் எதிர் நோக்கி இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண பாடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.