
ஈப்போ, பிப். 17: பிரதமரின் தம்புன் நாடாளுமன்ற தொகுதியில் இந்திய மாணவர்கள் உயர்கல்வி தொடர வாய்ப்புகள் வழங்கி வருகிறது.தற்போது ஈப்போவிலுள்ள திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் 7 இந்திய மாணவர்கள் படிப்பதற்கு உபகாரச் சம்பளம் வழங்கியுள்ளதாக தம்புன் நாடாளுமன்ற தொகுதியின் பிரதமரின் சிறப்பு மேலதிகாரி டத்தோ ஆர்.சுரேஸ் குமார் கூறினார்.
உயர்கல்வியை தொடரவுள்ள மாணவர்களின் உபகாரச் சம்பளம் சுமார் 2 இலட்சம் ரிங்கிட்டிற்கு மேல் எட்டியுள்ளது. இந்த அரிய வாய்ப்பினை இத்தொகுதியின் இந்திய மாணவர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ளும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
40 வயதிற்கும் கீழ்பட்டவர்கள் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் டிப்ளோமா மற்றும் பட்டப்படிப்பை தொடர முடியும். அவர்கள் படிப்பதற்கு நிதியுதவியை தம்புன் நாடாளுமன்ற தொகுதி வழங்க தயாராகவுள்ளதாக அவர் அறிவித்தார்.
குடும்ப சூழல் மற்றும் வருமானம் பற்றாக்குறையால் உயர்கல்வியை தொடர முடியாத நிலைப்பாடு உருவாகியது. ஆனால், தற்போது தம்புன் நாடாளுமன்ற தொகுதியின் உதவியால் தம் மகன் வேலை செய்துக்கொண்டே படித்து வருவது மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது என்று கேசவனின் தந்தை கூறினார்.
குறிப்பாக, தம்புன் தொகுதியை சேர்ந்த இந்திய சமூகத்தினர் தங்களின் உயர்கல்வியை தொடர தம்புன் நாடாளுமன்ற சேவை மையத்தின் உதவியை நாடி மேலும் கூடுதல் தகவல்களை பெற்றுக்கொள்ளும்படி டத்தோ ஆர்.சுரேஸ் குமார் கேட்டுக்கொண்டார்.
அதுமட்டுமின்றி, தம்புன் நாடாளுமன்ற தொகுதியில் செயல்பட்டுவரும் 5 தமிழ்ப்பள்ளியை சேரந்த பி40 மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அதோடு, இத்தொகுதியிலுள்ள இந்திய பாலர்பள்ளிகளுக்கு நோட்டுப்புத்தகங்களும் இலவசமாக வழங்கப்பட்டதாக அவர் கோடிக்காட்டினார்