துன் டாக்டர் சாமிவேலு அவர்களுக்கு தமிழ் இளைஞர் மணிமன்றம் நன்றி கடன் பட்டுள்ளது! தலைவர் முருகன் மணியம் பெருமிதம்

கோலாலம்பூர் பிப் 23-
முன்னாள் ம இகா தேசியத் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் துன் டாக்டர் சாமிவேலு அவர்களுக்கு மலேசிய தமிழ் இளைஞர் மணி மன்றம் நன்றி கடன் பட்டுள்ளது என்று மணிமன்றத்தின் தலைவர் முருகன் மணியம் தெரிவித்தார்.

மலேசிய தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் வளர்ச்சிக்கு அமரர் துன் சாமிவேலு பெரும் உதவிகளை வழங்கி இருக்கிறார்.

அதேசமயம் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம் சரவணன் அவர்களும் மணிமன்றத்திற்கு நிறைய உதவிகளைச் செய்தார்.

பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் மனிதவள அமைச்சர் சிவகுமார் அவர்களும் மன்றத்திற்கு உதவிகளை செய்துள்ளார்.

மலேசிய தமிழ் இளைஞர் மணி மன்றம் கட்டடம் இன்னமும் மன்றத்தின் பெயரில் தான் உள்ளது என்று அவர் சொன்னார்.

ஒரு முன்னாள் தலைவர் ஒருவர் அண்மையில் மணிமன்றத்தின் கட்டடம் பிகேஎன்எஸ் பெயரில் இருக்கிறது என்று பத்திரிகை செய்தியை வெளியிட்டார்.

மணிமன்றத்திற்கு எதிராக அவதூறாகளை பரப்பும் தரப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.

தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் பெயரில் இன்னொரு இயக்கம் உருவாகி உள்ளது.

இதுபற்றி எங்களுக்கு கவலை இல்லை. பல சவால்கள் வந்தாலும் நாங்கள் தொடர்ந்து மணிமன்றத்தை வழிநடத்துவோம் என்று அவர் சொன்னார்.

மலேசிய தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் 54 ஆம் ஆண்டு பேரவையில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தேசிய அளவில் சிறந்த மணிமன்றமாக தேர்வு செய்யப்பட்ட மலாக்கா மாநில மணிமன்றத்திற்கு 3,000 வெள்ளி மற்றும் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles