
கோலாலம்பூர் பிப் 23-
மலேசிய அரசியல் வரலாற்றில் நமக்காக பேச ஒரு தமிழ் அமைச்சர் இல்லை. முன்பு அமைச்சரவையில் சிவகுமார் இருந்தார். அதற்கு முன்னர் ம இகா தலைவர்கள் அமைச்சர்களாக இருந்தனர்.
இந்திய சமுதாயம் குறிப்பாக தமிழர்கள் பிரச்சினை குறித்து அவர்களிடம் பேச முடிந்தது. இப்போது எந்த ஒரு தமிழ் அமைச்சரும் இல்லை.
கடந்த காலங்களில் வீரவசனம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்போது ஆட்சிக்கு வந்ததும் அமைதியாகி விட்டனர். தங்கள் பதவியை தற்காத்துக் கொண்டால் போதும் என்று நினைக்கிறார்கள்.
இப்போது எல்லாம் இந்திய சமுதாயத்திற்காக இவர்கள் குரல் கொடுப்பது இல்லை. இந்த விவகாரத்தில் ம இகா தலைவர்கள் மற்றும் சிவகுமாரை பெரிதும் பாராட்டுகிறேன்.
ம இகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் மற்றும் டத்தோ டி.மோகன் ஆகியோர் இன்னமும் சமுதாயத்திற்காக துணிந்து குரல் கொடுத்து வருகின்றனர் என்று மலேசிய தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் தலைவர் முருகன் மணியம் தெரிவித்தார்.
மலேசிய தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் 54 ஆவது பொதுப் பேரவையில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

