மகளிர் உருமாற்ற கருத்தரங்கு! கலந்து கொண்டு பயணடைவீர்

கோலாலம்பூர், மார்ச் 2-
உலக மகளிர் தினத்தையொட்டி இந்திய பெண்கள் தன்னம்பிக்கை மற்றும் தலைமைத்துவ பண்புகள் வழி வாழ்க்கையில் வளம் பெற சிறப்பு கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புக்கிட் ஜாலில் ரோட்டரி கிளப் ஏற்பாட்டிலான இந்நிகழ்ச்சி இம்மாதம் 8ஆம் தேதி தலைநகர் மஇகா தலைமையக நேதாஜி மண்டபத்தில் காலை மணி 9.00 தொடங்கி மாலை மணி 5.00 வரை நடைபெறும்.

பெண்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி தாங்கள் ஈடுபட்டிருக்கும் துறைகளில் சாதனை படைப்பதற்கு இக்கருத்தரங்கம் தூண்டுகோளாக அமையும் என்பது நிச்சயம்.

பல்வேறு துறைகளில் வெற்றிக் கொடிகளை நிலைநாட்டிய பெண்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பினையும் இந்நிகழ்ச்சி வழி பெண்கள் பெறலாம்.

சுமார் 150 பெண்கள் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படும் இக்கருத்தரங்கிற்கான கட்டணம் 50 வெள்ளியாகும்.

சட்டத் துறை,அழகுக் கலை,
தொழில் முனைவர் போன்ற துறைகளில் பிரசித்தி பெற்றவர்களோடு தேசிய புற்றுநோய் கழக அதிகாரியும் இக்கருத்தரங்கில் பயனுள்ள தகவல்களை வழங்குவர்.

வாழ்க்கையில் பீடுநடை போட இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பயனடையும்படி சுற்று வட்டார பெண்களை புக்கிட் ஜாலில் ரோட்டரி கிளப் தலைவர் சரண்யா முருகேந்திரன் கேட்டுக் கொண்டார்.

நற்சான்றிதழ் வழங்கப்படும் இந்நிகழ்ச்சியில் காலை & மதிய உணவோடு மாலையில் தேநீரும் வழங்கப்படும்.

பதிவு மற்றும் மேல் விவரங்களுக்கு சரண்யா 016-3141535 & பாம் 011-26106913 ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles