
கோலாலம்பூர் மார்ச் 4-
தைப்பூசத்தில் முருகப் பெருமானுக்கு காணிக்கை செலுத்தும் பக்தர்களின் வேல் வேல் காவடி நடனத்தை கேலி செய்த ஆஸ்ட்ரோ நிறுவனத்தின் ஏரா எப்.எம் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ம இகா தேசிய உச்சமன்ற உறுப்பினர் மற்றும் விளையாட்டு பிரிவு தலைவர் ஆண்ட்ரூ டேவிட் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த எப்.எம். விடியோ காட்சியை குறைந்தது 48 லட்சம் பேர் பார்த்தும் கேட்டும் இருக்கிறார்கள்.
தங்கள் செயலுக்கு மூவர் மன்னிப்பு கோரியுள்ளார்.
இந்த மன்னிப்பு போதாது. இவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பல்லின மக்கள் வாழும் மலேசியா திருநாட்டில் நல்லிணக்கத்தை பேணும் வகையில் அனைவரும் இருக்க வேண்டும்.
யாரும் எந்த மதத்தையும் இனத்தையும் புண்படுத்த கூடாது.
ஆகவே மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைய கண்டிப்பாக மல்டிமீடியா தகவல் தொடர்பு துறை சட்டத்தின் கீழ் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

