வேல் வேல் காவடி நடனத்தை கேலி செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துங்கள்! :-டாக்டர் சத்யா பிரகாஷ்

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் மார்ச் 4-
தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கு கொண்டாப்படும் தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் காவடி எடுத்து காணிக்கை செலுத்தி வருவது பாரம்பரியமாகும்.

காணிக்கை செலுத்தும் பக்தர்களின் வேல் வேல் காவடி நடனத்தை இப்போது நாட்டில் புகழ்பெற்ற ஆஸ்ட்ரோ நிறுவனத்தின் ஏரா எப்.எம் வானொலி கேலி செய்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்யா பிரகாஷ் தெரிவித்தார்.

மலேசிய நாடு பல்லின மக்களைக் கொண்டது. இங்கு அனைவரும் சகோதரத்துவத்துடன் ஒருவரை ஒருவர் புரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

யாரும் எந்த மதத்தையும் இனத்தையும் புண்படுத்த கூடாது என்று அரசாங்கம் பலமுறை வலியுறுத்தி வருகிறது.

இருப்பினும் இதையும் மீறி சிலர் மதத்தையும் சமயத்தையும் கேலி செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

தவறு செய்து விட்டு மன்னிப்பு கேட்பது வாடிக்கையாகி விட்டது.

இந்த மன்னிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது.
சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டத்தின் கீழ் தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles