
மா. பவளச்செல்வன்
பிறை, மார்ச் 6-
இந்து மதத்தை இழிவுபடுத்திய சர்ச்சைக்குரிய சமய போதகர் ஷம்ரி வினோத்திற்கு எதிராக மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் போலீஸ் புகார் செய்துள்ளார்.
இன்று காலையில் பினாங்கு செபாராங் பிறை காவல் நிலையத்தில் அவர் புகார் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷம்ரி வினோத் இந்து சமயத்தை இழிவு படுத்துவது இது முதல் முறையல்ல.
ஏற்கெனவே பலமுறை அவர் இந்து மதத்தை மிகவும் கேவலமான முறையில் இழவு படுத்தி இருக்கிறார்.
இவர் மீது பல போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.ஆனால் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆனால் இப்போது மலேசியாவில் வாழும் பல்லின மக்கள் இடையே ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் அவரின் செயல் அமைந்துள்ளது.
ஆகவே அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று டத்தோஸ்ரீ தனேந்திரன் தனது போலீஸ் புகாரில் கேட்டுக் கொண்டுள்ளார்.

