




மா.பவளச்செல்வன்
கோலாலம்பூர் மார்ச் 07:
இனிய நோன்பு பெருநாளை முன்னிட்டு ஸ்தாப்பாக் அஸ்னாப் மதராசா ஃபரிடியா 2,500 குடும்பங்களுக்கு உணவு கூடைகளை வழங்கியது.
இன்று மாலையில் நோன்பு திறப்பு விழாவில் 2, 500 குடும்பங்களுக்கு நேரடியாக உணவு கூடைகள் வழங்கப்பட்டது.
பெரெஸ்மா எனப்படும் மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி ஜவகர் அலி தலைமையில் 2,500 குடும்பங்களுக்கு உறவு கூடைகள் வழங்கப்பட்டன.
இந்த உணவு கூடைகளின் மதிப்பு ஐந்து லட்சம் வெள்ளி ஆகும்.
பெரஸ்மா அமைப்பு இந்த உணவு கூடைகளை தங்கள் உறுப்பினர்கள் மூலமாக அன்பளிப்பு செய்ததாக அவர் சொன்னார்.
முன்னாள் மேலவை துணை சபாநாயகர் அப்துல் அலிம் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்.
உணவு கூடைகளை பெற்றுக் கொண்ட மக்கள் பெரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் அஸ்னாப் மதராசா ஃபரிடியா ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து உணவு கூடைகளை வழங்கி பேரு உதவி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
நாட்டில் புகழ்பெற்ற Nestle, F&N, Gardenia உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த நிகழ்ச்சி வெற்றி பெற ஆதரவு கரம் நீட்டியதாக அவர் சொன்னார்.
பேறு குறைந்தவர்கள் இந்த நிகழ்வில் முன்னுரிமை பெற்றனர். வங்சா மாஜு, ஸ்தாப்பாக் சுற்று வட்டத்தை சேர்ந்த மக்கள் இதன் மூலம் பெரும் நன்மை அடைந்தனர்.
கடந்த 1986 ஆம் ஆண்டு முதல் இந்த மதரசா சிறப்பாக இயங்கி வருகிறது.
எகிப்து, ஏமன், இந்தியா போன்ற நாடுகளில் தாஃபிஸ் பள்ளிக் குழந்தைகள் வெளிநாடுகளில் உயர்க்கல்வி பெற இந்த மதரசா பேருதவி புரிந்துள்ளது.
இன்றைய நிகழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து சிறப்பித்தனர்.

