
செனாவாங், மார்ச் 14-
MiSI எனப்படும் மலேசிய இந்திய திறன் அமைப்பின் ஏற்பாட்டில் இம்மாதம் 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட கிடங்கு நிர்வாகம், மளிகை மற்றும் சில்லரை வணிகம், பொருட்கள் நிர்வாக சங்கிலி திறன் பயிற்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
தெற்கு மாநில பகுதியில் இந்த பயிற்சி திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்தியர்கள் தொழித்துறையில் சிறந்த விழங்க அவர்களுக்கு மேல் கூறப்பட்ட துறைகளில் திறன் பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் இத்திட்டத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.
இந்த பயிற்சியின் மூலம் பொருட்களை முறையாக ஒழுஙகமைத்து நிர்வகிக்கும் சிறந்த நடைமுறைகளை அறிந்ததுடன், கிடங்கிலிருந்து இறுதி நுகர்வோர் வரை செல்லும் பொருட்கள் விநியோக சங்கிலி செயல்முறையை புரிந்து கொள்ள பயிற்சிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
பயிற்சியில் பங்கேற்றவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் தங்களது அறிவு தெளிவடைந்ததாகவும், நடைமுறை பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் தெரிவித்தனர். அவர்கள் தங்களது வேலைகளில் புதிய அறிவைப் பயன்படுத்தும் சந்தோஷத்தையும் பகிர்ந்து கொண்டனர்.

பயிற்சி முடிவில் ராசா நாடாளுமன்ற உறுப்பினர் Chah Kee Chin மற்றும் செரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் குணா ஆகியோர் கலந்து கொண்டு பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர். தொழில்துறை வளர்ச்சிக்காக திறன்களை மேம்படுத்துவது எவ்வளவு முக்கியம் என்பதையும், இந்தப் பயிற்சியில் பெற்ற அறிவை தொழில் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்த வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த சான்றிதழுடன், பங்கேற்பாளர்கள் தங்கள் தொழில் வளர்ச்சியில் முன்னேறுவதற்கும் வேலை வாய்ப்புகளைப் பெருக்கும் சிறந்த வாய்ப்பைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

