
கோலாலம்பூர் மார்ச் 24-
வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் கெஅடிலான் கட்சியின் தேர்தலில் தேசிய உதவி தலைவர் பதவிக்கு தேர்தலில் தாம் போட்டியிடவிருப்பதாக இக்கட்சியின் தகவல் பிரிவு துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் அறிவித்துள்ளார்.
பிகேஆர் கட்சியை அடிமட்ட நிலையில் இருந்து மத்திய தலைமைத்துவம் வரை வலுப்படுத்தும் நோக்கத்திற்காகத் தாம் இப்பதவிற்குப் போட்டியிட விருப்பதாக தொழில் முனைவர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துறை துணைய மைச்சருமான டத்தோஸ்ரீ இரமணன் குறிப்பிட்டார்.
“இந்த மிகப்பெரிய பொறுப்பை ஏற்பது குறித்து முடிவெடுப்பதற்கு முன்பு நாடு முழுமையும் உள்ள கட்சித் தலைவர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் நான் கலந்துரையாடினேன்.
“எனது இந்த முடிவு குறித்து பிரதமரும் பிகேஆர் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிடமும் நான் தெரிவித்துவிட்டேன்” என்று சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ இரமணன் தெரிவித்தார்

