ஆலய விவகாரத்தில் கிடைத்த சமாதான தீர்வை வரவேற்போம் – DAP துணைத் தலைவர் அருள்குமார்

ஜாலான் மஸ்ஜிட் இந்தியா தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் கோயில் விவகாரத்தில் ஒரு வழியாக சுமூகத் தீர்வு கிடைத்துள்ளது.

நல்லிணக்க முறையில் இடமாற்றம் செய்யப்படுமென்ற அறிவிப்பை அனைவரும் வரவேற்க வேண்டுமென, DAP உதவித் தலைவர் J. அருள்குமார் கூறியுள்ளார்.

நிலம் தொடர்பான பிரச்சனை எழுந்ததிலிருந்து, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மத்திய அரசு மற்றும் DBKL உள்ளிட்ட தரப்புகள், இந்த கோயிலை இடமாற்றம் செய்வதில் ஒருமித்த தீர்வு எட்டப்படும் வரை, கோயில் இடிக்கப்படாது என்று உறுதியளித்தனர்.

அதற்கேற்ப, அதே மஸ்ஜிட் இந்தியா பகுதியில் 4,000 சதுர அடி பரப்பளவில், தற்போதுள்ள கோயிலிலிருந்து 50 மீட்டர் தூரம் கொண்ட ஒரு நிலம் புதிய கோயிலைக் கட்டுவதற்குக் கிடைத்துள்ளது.

மிக முக்கியமாக, அரசாங்கம் நிரந்தர நிலப்பாட்டா வழங்கும் என்றும் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அறிவித்துள்ளார்.

ஓர் உணர்ச்சிப்பூர்வமான விவகாரத்தில், இது ஒரு சரியான தீர்வு என, நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான அருள்குமார் வருணித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles