நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார் ஷம்ரி வினோத்! இரு நாட்கள் தடுத்து வைக்க உத்தரவு

கங்கார், மார்ச் 28-
சர்ச்சைக்குரிய சமய போதகர் ஷம்ரி வினோத் இன்று காலையில் பெர்லிஸ் மாநிலத்தில் உள்ள கங்கார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

ஷம்ரி வினோத்தை இரண்டு நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

சமூக ஊடக தளமான முகநூலில் மதத்தை அவமதித்ததாகவும், பொது ஒழுங்கை அச்சுறுத்தியதாகவும் தொடரப்பட்ட வழக்கு விசாரணைகளில் உதவுவதற்காக ஷம்ரி வினோத்திற்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

41 வயதான ஷம்ரி வினோத், தேசத்துரோகச் சட்டம் 1948 இன் பிரிவு 4(1), தகவல் தொடர்புச் சட்டம் 1998 இன் பிரிவு 233 இன் கீழ் மேலதிக விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டதாக தேசிய போலிஸ் படைத் தலைவர் டான்ஶ்ரீ ரசாருதீன் ஹுசைன் நேற்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை சுமார் 9.30 மணியளவில் பெர்லிஸில் உள்ள கங்கார் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் அனா ரோசானா முகமட் நோர் முன்னிலையில் அவர் நிறுத்தப்பட்டார்.

கோலாலம்பூர்
ஜாலான் மஸ்ஜித் இந்தியா தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் இடமாற்றம் செய்வது தொடர்பில் முகநூலில் இனவெறி கருத்து பதிவிட்டது தொடர்பில் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு ஷம்ரி கைது செய்யப்பட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles