
கோலாலம்பூர்,மார்ச்28: 2025 ஆம் ஆண்டில் நாம் அடியெடுத்து வைத்திருக்கும் வேளையில், மலேசிய மாநாடு மற்றும் கண்காட்சி பணியகம் (MyCEB) வணிக சுற்றுலாவை முன்னெடுப்பதிலும் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதிலும் தொடர்ந்து முக்கிய பங்கு வகித்து வருவதாக அதன் தலைவரான மாண்புமிகு வ.சிவகுமார் குறிப்பிட்டார்.
மேலும்,வலுவான தொலைநோக்கு மற்றும் ஆக்கப்பூர்வமான நோக்கத்துடன், நாட்டிற்கு இன்னும் பொருளாதார ரீதுயிலான பெரிய தாக்கத்தை வழங்க நாங்கள் சரியான பாதையில் பயணிப்பதாகவும் கூறிய அவர் மார்ச் 24, 2025இன் நிலவரப்படி MyCEB சமீபத்திய சாதனைகளைப் பகிர்ந்து கொள்வதில் தாம் பெருமிதம் கொள்வதாகவும் விவரித்தார்.
- 2025 க்கு பாதுகாக்கப்பட்ட 115 வணிக நிகழ்வுகள்
- 82,535 சர்வதேச பிரதிநிதிகள்
- மொத்தம் 326,000 பிரதிநிதிகள்
- மதிப்பிடப்பட்ட பிரதிநிதி செலவு: RM534 மில்லியன்
- மதிப்பிடப்பட்ட பொருளாதார தாக்கம்: RM1.25 பில்லியன்
இந்த ஆரம்ப புள்ளிவிவரங்கள் MyCEB குழுவின் மீள்தன்மை, அர்ப்பணிப்பு மற்றும் மூலோபாய திசையை பிரதிபலிக்கின்றன. MyCEB-ன் தலைவர் என்ற முறையில், MyCEB குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்காக நான் அவர்களைப் பாராட்டி நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்றார்.
அதுமட்டுமின்று,இது வெறும் ஆரம்பம்தான். வளர்ச்சியை விரைவுபடுத்தவும், மலேசியாவை ஒரு முதன்மையான வணிக செயல்பாடுகளுக்கான தலமாக நிலைநிறுத்தவும், 2025 மற்றும் அதற்குப் பிறகு நமது பொருளாதாரத்தை புதிய உயரத்திற்கு உயர்த்தவும் MyCEB தொடர்ந்து அதன் திறன்மிக்க செயல்பாடுகளை துரிதமாய் முன்னெடுக்கும் என்றும் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தில் MyCEBஇன் பங்களிப்பு ஆக்கப்பூர்வமானதாகவும் தவிர்க்க இயலாத ஒன்றாகவும் உருவெடுத்தும் வரும் சாத்தியத்தை மறுப்பதற்கில்லை என்றும் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினருமான சிவகுமார் நினைவுறுத்தினார்.

