
ஈப்போ,மார்ச்28: தமிழ் எழுத்துலகில் வே.விஷாகம் உட்பட பல்வேறு புனைப்பெயர்களில் தொடர்ந்து எழுதி வரும் வே.இராமையாவின் எளிமையான வினாக்கள் அறிவார்ந்த பதில்கள் என்னும் நூல் வெளியீடு மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.
இந்நூல் வெளியீடு வருகின்ற ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி மாலை மணி 3.30க்கு புந்தோங் கம்போங் செக்கடி காளியம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது என நூலைசிரியர் வே.இராமையா தெரிவித்தார்.
மலேசியத் தமிழ் நாளிதழ்களில் ஆன்மிகம்,குடும்பம்,சுகாதாரம் உட்பட பல்வேறு கட்டுரைகளையும் கவிதை,சிறுகதைகளையும் எழுதியுள்ள இவர் சுமார் 40ஆண்டுகளாக தொடர்ந்து எழுதியும் வருகிறார்.
ஆன்மிகத்திலும் பக்தியிலும் தனித்திவ ஆர்வமும் முனைப்பும் காட்டி வரும் இவர் ஆன்மிகம் சார்ந்தும் சமயம் சார்ந்து எழுப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அறிவார்ந்த பதில்களை இந்நூலில் வழங்கியுள்ளார்.
சுமார் 40ஆண்டுக்கால் எழுத்துப் பயணத்தில் அவர் வெளியீடு செய்யும் முதல் நூல் இதுவாகும்.
ஈப்போ அதன் சுற்றுவட்டார பொது மக்கள்,எழுத்தாளர்கள்,வாசகர்கள் உட்பட சமய சிந்தனையாளர்களும் இந்நூல் வெளியீடுக்கு திரளாக கலந்து ஆதரவளிக்குமாறு நூலாசிரியர் கேட்டு கொண்டார்.